சட்டக் கல்லூரி மாணவன் என மிரட்டிய டீ மாஸ்டர் : டிக்கெட் எடுக்காத இளைஞரை போலீசில் ஒப்படைத்த நடத்துநர்

ஓமலூர் அருகே அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் தாம் சட்ட கல்லூரி மாணவன் என நடத்துனரை மிரட்டிய டீ மாஸ்டரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.;

Update: 2020-02-21 07:35 GMT
ஓமலூர் அருகே அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காமல்  தாம் சட்ட கல்லூரி மாணவன் என நடத்துனரை மிரட்டிய  டீ மாஸ்டரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.  டேனிஷ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர்  பேருந்தில்  ஏறியபோது நடத்துநர் வடிவேல் என்பவர்  டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது, தான் சட்டக்கல்லூரி மாணவன் என கூறி  தகராறில் ஈடுபட்டதுடன், நடத்துநரை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. அதை பார்த்த பொதுமக்கள், இளைஞரை பிடித்து ஓமலூர்  காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர். சேலத்தில் உள்ள ஒரு  காபி பாரில் டீ மாஸ்டராக அந்த இளைஞர் வேலை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்