வடசென்னை அனல் மின்நிலைய தொழிலாளர்கள் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் பணிநிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில், பணிநிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிப்பதாக, அனல் மின்நிலைய நிர்வாகத்தை கண்டித்து, அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், அடுத்தக்கட்டமாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் எச்சரித்தனர்.