தஞ்சை பெரிய கோவில் அறங்காவலர் மீதான முறைகேடு வழக்கு தள்ளுபடி
தஞ்சாவூர் பெரிய கோயிலை நிர்வகிக்கும் அரண்மனை சமஸ்தான பரம்பரை அறங்காவலர் மீதான முறைகேடு புகார் குறித்து, விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.;
கடந்த 1985ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலை நிர்வகிக்க, அரண்மனை சமஸ்தான பரம்பரை அறங்காவலராக, மராத்திய மன்னர் வாரிசான பாபாஜி ராஜா போன்ஸ்லே என்பவரை இந்து சமய அறநிலையத்துறை நியமித்தது.
* இந்த நியமனத்தை ரத்து செய்ய கோரியும், பாபாஜி மீதான முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்த கோரியும், எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த சுவாமிநாதன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
* விசாரணையின் போது, பாபாஜி ராஜா போன்ஸ்லே அறங்காவலராக இருந்த போது, ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதா தேவி சிலைகள் காணாமல் போனதாகவும், பாரம்பரியத்தை காக்க அவர் தவறிவிட்டதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
* வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், சிலைகள் காணாமல் போனது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அறங்காவலர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால், இந்து சமய அறநிலையத்துறை விசாரணை நடத்தும் என நம்புவதாக தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.