முதுமலை சரணாலயத்தில் கடும் வறட்சி : சாலையின் இருபுறமும் தீ தடுப்பு கூடுகள் அமைப்பு
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் வறட்சி நிலவ துவங்கியுள்ளதால், அங்கு காட்டுத் தீ ஏற்படுவதை தடுக்கும் விதமாக, வனத்துறையினர் தீ தடுப்பு கூடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.;
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் வறட்சி நிலவ துவங்கியுள்ளதால், அங்கு காட்டுத் தீ ஏற்படுவதை தடுக்கும் விதமாக, வனத்துறையினர் தீ தடுப்பு கூடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி - மைசூர் சாலை, மசினகுடி, தெப்பக்காடு, பொக்காபுரம், மாயார் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும், இந்த தீ தடுப்பு கூடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சுற்றுலா பயணிகள் காட்டு தீ ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.