"ரூ.300 கோடிக்கு மேல் வருமானம் மறைப்பு" : வருமான வரித்துறை அறிக்கையில் தகவல்
'பிகில்' பட வசூலில், 300 கோடி ரூபாய்க்கு மேல் மறைக்கப்பட்டிருப்பதாக, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.;
'பிகில்' பட வசூலில், 300 கோடி ரூபாய்க்கு மேல் மறைக்கப்பட்டிருப்பதாக, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சினிமா பைனான்சியருக்கு சொந்தமான பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. பிகில் படத்திற்காக விஜய் பெற்ற சம்பளத்தில் வாங்கிய சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த செய்திக்குறிப்பில் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.