தற்கொலை செய்து கொண்ட கோயில் பூசாரி குடும்பத்துக்கு இழப்பீடு? - அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தற்கொலை செய்துகொண்ட கோயில் பூசாரி நாகமுத்து குடும்பத்துக்கு ஆதி திராவிடர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இழப்பீடு வழங்கப்பட்டதா என அரசுத்தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-04 20:37 GMT
தற்கொலை செய்துகொண்ட கோயில் பூசாரி நாகமுத்து குடும்பத்துக்கு ஆதி திராவிடர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இழப்பீடு வழங்கப்பட்டதா என அரசுத்தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் கைலாசப்பட்டியில் கோயில் பூசாரியாக இருந்த நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் அப்போது டிஎஸ்பிக்களாக பணிபுரிந்த உமாமகேஸ்வரி, சேது மற்றும் காவல் ஆய்வாளர்கள் இளங்கோவன், செல்லப்பாண்டியன் ஆகியோரை சேர்க்க கோரி நாகமுத்துவின் தந்தை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்