அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது திமுக புகார்
மதவெறியை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திமுக சார்பில் ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
மதவெறியை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திமுக சார்பில் ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், மா.சுப்பிரமணியன் ஆகிய இருவரும் ஆளுநர் செயலாளர் ஆனந்த ராவ் விஷ்னு படேலிடம் புகார் மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ அன்பழகன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.