சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு : மேலும், ஒரு தீவிரவாதி கைது
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில், ராமநாதபுரத்தில் வைத்து மேலும் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.;
களியக்காவிளை அருகே கடந்த எட்டாம் தேதி சிறப்பு எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில், தொடர்புடைய தீவிரவாதிகள் அப்துல் சமீம், துல்பீக் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களுக்கு உதவியதாக இருந்த சேக்தாவூத் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், ராமநாதபுரம் மீனவ கிராமத்தில் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதி சேக்தாவூத்தை போலீஸ் கைது செய்தது. தீவிரவாதி மீது உப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை, ராமநாதபுரம் சிறப்பு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேக்தாவூத்தை சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, இறை வழியில் மரணம் என்ற வாட்சப் குழுவை நடத்தி வந்ததாக சேக்தாவூத்தை தேசிய புலனாய்வு முகமை கைது செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.