எம்.ஜி.ஆர் 103-வது பிறந்த நாள் கொண்டாட்டம்
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 -வது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 -வது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.