சிதலமடைந்து காணப்படும் ஜாகிர் அரண்மனை - அருங்காட்சியகமாக மாற்ற அரசுக்கு கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஜாகிர் அரண்மனை புதுப்பித்து, அருங்காட்சியகமாக மற்ற தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-01-10 06:19 GMT
ஆரணி அடுத்த எஸ்.வி. நகரம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஜாகிர் அரண்மனை கோட்டை உள்ளது. இந்த கோட்டை சுமார் 300ஆண்டுக்கு மேலாக உள்ளதாக வரலாற்று கூறுகள் கூறுகின்றன. ஆங்கிலேயேர் காலத்தில் சுமார் 35 ஏக்கரில் கட்டப்பட்டு ஜாகீதார் ஆண்ட  இந்த கோட்டை, தற்போது  இந்திய அரசின் கட்டுபாட்டில் உள்ளது.

இந்நிலையில், ஜாகிர் அரண்மனை, மிகவும் சிதலமடைந்து, கேட்பாரற்று  உள்ள நிலையில், அங்கிருந்த வரலாற்று சின்னங்கள், அனைத்தும் வேலூர் அருட்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, அரண்மனை புதுப்பித்து, அருங்காட்சியகமாக மாற்றி, கோட்டையில் இருந்த வரலாற்று சின்னங்களை மீண்டும், இதே இடத்தில் வைக்க கோரி ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்