43-வது புத்தக கண்காட்சி - முதல்வர் துவக்கி வைப்பு
சென்னையில், 43வது புத்தக கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.;
சென்னையில், 43வது புத்தக கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி அடுத்த ஆண்டு முதல் புத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு சார்பில் 75 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். 21ம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தக கண்காட்சியில் 750க்கும் மேற்பட்ட அரங்குகளில் கலை, அறிவியல், வரலாறு, இலக்கியம், கல்வி,சமையல் குறிப்பு என பல்வேறு தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது.