முள்படுக்கையில் தவம் செய்த பெண் சாமியார் - அருளாசி பெற குவிந்த பக்தர்கள்

சிவகங்கையில் முள்படுக்கையில் தவம் செய்த பெண் சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் அருளாசி பெற்று சென்றனர்.

Update: 2020-01-04 06:57 GMT
சிவகங்கை மாவட்டம் லாடேனந்தல் பகுதியை சேர்ந்தவர் நாகராணி அம்மையார். இவர் வருடந்தோறும் மார்கழி மாதத்தில் இங்குள்ள முத்துமாரியம்மன் கோவிலில் முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்வது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் முள்படுக்கையில் தவம் செய்யும் நாகராணியை காண அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். இப்பகுதியை சுற்றியுள்ள காடுகளில் இருந்து பல்வேறு வகை முட்கள் மூலம் நான்கு அடி உயரத்திற்கு முள்படுக்கை அமைக்கப்பட்டது. நாகராணி, இந்த முள்படுக்கையின் மீது ஏறிநின்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவிட்டு, சுமார் ஒரு மணி நேரம் முள்படுக்கையில் படுத்து காட்சியளித்தார். முள்படுக்கையில் தவம் செய்யும் நாகராணியிடம் ஆசி பெற்றால் வேண்டியது நடக்கும் என பக்தர்கள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்