சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.12 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.;
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது கொழும்பு மற்றும் துபாயில் இருந்து, சென்னைக்கு வந்த 5 பேரிடம் இருந்து, ஒரு கோடியே, 12 லட்ச ரூபாய் மதிப்பிலான, 2 கிலோ 870 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.