"விசாரணைக்கு வரும் வழக்குகளின் பட்டியல் இனி வழங்கப்படாது" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 150 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-12-27 02:13 GMT
சென்னை உயர் நீதிமன்றத்தில் 150 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த  நடைமுறை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு வரும் வழக்குகளின் பட்டியல்  அரசு அச்சகம் மூலம்  புத்தகமாக அச்சிடப்பட்டு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ரத்து செய்ய  உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காகித பயன்பாட்டால் ஏற்படும் செலவீனங்களை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்