உள்ளாட்சி தேர்தல் : போட்டியின்றி தேர்வாகும் பஞ்சாயத்து தலைவர்கள்

உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பல இடங்களில் போட்டியின்றி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.;

Update: 2019-12-19 13:15 GMT
உள்ளாட்சி தேர்தல் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் பல உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிகளுக்கு பலரும் போட்டியின்றி தேர்வாகி வருகின்றனர். குலுக்கல் முறையில் தேர்வானார்களா..? அல்லது மக்கள் ஆதரவா என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதனிடையே, பல்வேறு பகுதிகளில் குலுக்கல் முறையில் தலைவர்கள் தேர்வாகும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
Tags:    

மேலும் செய்திகள்