"பணி நேரத்தில் மது போதையிலிருந்த தேர்தல் அலுவலர்"- பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

பணி நேரத்தில் மதுபோதையில் இருந்த அரசு அலுவலரை திருச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-12-14 22:57 GMT
உதவி வேளாண்மை அலுவலர் முருகன், திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையம் உள்ளாட்சி தேர்தல் அதிகாரியாக முருகன் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். நே​ற்று மதிய உணவுக்கு பின் வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள், முருகன் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், அரசு மதுபான கடையில் மது அருந்தி கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற சிலர் போதையிலிருந்த முருகனை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். போதையில் தேர்தல் அதிகாரி பணியாற்றியதை அறி​ந்து, ஊராட்சி வளர்ச்சி அதிகாரி குணசேகர், வேறு ஒரு அலுவலரை அனுப்பி வேட்புமனுக்களை வாங்க ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் முருகனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்