வேட்டி சேலை வழங்கிய வேட்பாளரின் ஆதரவாளர்கள் : புகார் அளித்த மக்கள்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரக்கை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் கந்தசாமி, அவரது மனைவி அல்லது மகளை போட்டியிட வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.;

Update: 2019-12-14 06:12 GMT
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரக்கை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் கந்தசாமி, அவரது மனைவி அல்லது மகளை போட்டியிட வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கந்தசாமியில் ஆதரவாளர்கள், கிராமங்களில் வேட்டி, சேலைகள் வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில், ராமநத்தம் கிராம மக்கள் எங்கள் ஊரில் வேட்டி சேலை வழங்கக்கூடாது எனக்கூறி, போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வந்த போலீசார் வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்து, 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்