கம்பம்: தீபத்திருநாளை முன்னிட்டு நடைபெற்ற யோகாசனம்
திருகார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் யோகாசனம் நடைபெற்றது;
திருகார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் யோகாசனம் நடைபெற்றது. விவசாயம் செழித்து, நாடு வளம்பெற வேண்டி, நடைபெற்ற யோகாசனத்தில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். அதில், அர்த கூர்மாசனம், பத்மாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தவாறே, தீபமேற்றி வழிபாடு நடத்தினர்.