அரிசி அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு கூடுதலாக அரிசி வழங்க ரூ.604 கோடி ஒதுக்கீடு : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு கூடுதலாக அரிசி வழங்க, 604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2019-12-03 10:38 GMT
சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு கூடுதலாக அரிசி வழங்க, 604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10 லட்சத்து 19 ஆயிரம் சர்க்கரை அட்டைதாரர்கள், அரிசி அட்டையாக மாற்றிக் கொள்ள தமிழக அரசு நவம்பர் 19 முதல் 29ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. இதைப் பயன்படுத்தி 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ள விண்ணப்பித்தனர். புதிதாக அரிசி அட்டைக்கு மாறிய அந்த பயனாளிகளுக்கு 20 ஆயிரத்து 389 டன் அரிசி கூடுதலாக வழங்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாதமும் 50 கோடி ரூபாய் வீதம், ஆண்டுக்கு 604 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கி உள்ளதாக,  அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்