டிஜிட்டல் மயமாகும் சட்டமன்ற நடவடிக்கைகள் : 'இ-விதான்' திட்டம் குறித்து 2 நாள்கள் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் சபாநாயகர்

தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தையும், மின் மயமாக்கும் நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாள் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

Update: 2019-11-25 09:06 GMT
பேரவை தலைவர் தனபால், பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். சட்டசபை அதிகாரிகள், அலுவலர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ளனர். டிஜிட்டல் மயமாகும் திட்டத்தின் மூலம், தமிழக சட்டப்பேரவையின் அனைத்து நடவடிக்கைகளும் காகிதம் இல்லாமல் மாற்றப்பட இருக்கிறது. கோப்புகள், ஆவணங்கள் அனைத்தும் எம்.எல்.ஏக்களுக்கு மின்னஞ்சல் மற்றும் செயலி வழியாக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. பாரம்பரிய மிக்க பேரவை மண்டபத்தில் மிகப் பெரிய டிஜிட்டல் திரைகள், எம்.எல்.ஏக்கள் இருக்கைக்கு முன்பாக, தொடு திரை வசதியுடன் கூடிய திரைகள், கையடக்கக் கணினி உள்ளிட்ட பல்வேறு  வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்