"எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்தது தமிழ் சினிமாவின் பொற்காலம்" - எடப்பாடி பழனிசாமி

தீய கருத்துக்களை பரப்பும் வகையில் திரைப்படங்களை எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-11-24 16:16 GMT
தீய கருத்துக்களை பரப்பும் வகையில் திரைப்படங்களை எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் வெற்றி விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் . கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்களும் திரையுலகை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் , இயக்குனர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெளியிடப்பட்டு வெற்றிபெற்ற  3 திரைப்படங்களில் பங்கேற்றவர்களுக்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், திரைப்படத்துறைக்கு தமிழக அரசு, செய்துள்ள பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார். திரைப்படங்கள் மூலம் , இளைஞர்களுக்கு, எம்.ஜி.ஆர் நல்ல கருத்துக்களை கூறியதாக குறிப்​பி​ட்ட முதலமைச்சர், தீய கருத்துக்களை பரப்பும் வகையில் திரைப்படங்களை எடுக்க வேண்டாம் என்று திரைத்துறையினரை கேட்டு கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்