வேகத் தடுப்பில் மோதிய தலைமைக் காவலர் வாகனம் : காதில் ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலர் சாம் பிரேம் தடுப்புக் கம்பியில் மோதி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.;

Update: 2019-11-21 02:15 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலர் சாம் பிரேம் தடுப்புக் கம்பியில் மோதி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ரெட்டியாப்பட்டி காவல் நிலைய, தலைமை காவலரான பொம்மக்கோட்டையைச் சேர்ந்த அவர், முத்துராமலிங்கபுரம் பகுதியில், வேகத் தடுப்பில் மோதி கீழே விழுந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரைமீட்டு அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், காதில் ரத்தம் வழிந்த நிலையில், முன்னதாகவே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பணி நிமித்தமாக சென்றபோது, இந்த எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்