நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு: மாணவனின் விரல் பதிவை ஒப்பிட்டு பார்க்க சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற உத்தரவு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மாணவனின் தற்போதைய விரல் பதிவையும் நீட் தேர்வு எழுதப்பட்ட போது தேர்வு மையத்தில் பெறப்பட்ட விரல் பதிவையும் ஒப்பிட்டு பார்க்க சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-19 12:41 GMT
நீட்ஆள் மாறாட்ட வழக்கில் தொடர்புடைய சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் அவரின் மகன் ரிஷிகாந்த் இருவரும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வு அனுமதி சீட்டில் மாணவனின் புகைப்படம் மாறியுள்ளதாக கூறி நீட் தேர்வு ஆணையம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மாணவன் தரப்பில் கூறப்பட்டது. இதைக்கேட்டுக்கொண்ட நீதிபதி மாணவனின் விரல் பதிவையும் நீட் தேர்வு எழுதப்பட்ட போது தேர்வு மையத்தில் மாணவனிடம் பெறப்பட்ட விரல் பதிவையும் ஒப்பிட்டு பார்க்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதுவரை மாணவன் மற்றும் அவரின் தந்தையை கைது செய்ய தடை நீடிக்கும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்