கோபி சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை : குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

Update: 2019-11-11 08:45 GMT
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. வேதபாறை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக  பகவதி நகர், வளையபாளையம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால், சத்தியமங்கலம் - அந்தியூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கணக்கம்பாளையம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து வருவாய் துறையினர் விரைந்து வந்து வெள்ளநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்