திமுக பிரமுகர் இல்லத் திருமணத்தில் கொள்ளை :நகையை திருடியவர் கைது
சேலத்தில் திமுக பிரமுகர் இல்லத் திருமணத்தில் மண்டபத்தில் வைத்திருந்த நகைகளை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.;
சேலத்தில் திமுக பிரமுகர் இல்லத் திருமணத்தில், மண்டபத்தில் வைத்திருந்த நகைகளை திருடிச்சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர். ஜாகிர் அம்மாபாளையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 31 -ம் தேதி, சூரமங்கலம் பகுதி திமுக பிரமுகர் சரவணன் இல்லத்திருமண விழா நடைபெற்றது. அப்போது, மணமகன் அறையில் வைத்திருந்த 32 சவரன் நகை திருடு போனது. விசாரணை நடத்திய போலீசார், நகைகளை திருடிய, சின்ன திருப்பதியை சேர்ந்த மகபூப் அலி என்பவரை கைது செய்தனர்.