பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தவர்கள் யார்? : இருவேறு தகவல்கள் அளிக்கப்பட்டதால் சர்ச்சை

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தவர்கள் குறித்து இருவேறு தகவல்கள் அளிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

Update: 2019-11-07 10:53 GMT
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்திக்க, கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி யார் யார் எல்லாம் வந்தார்கள் என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்மமூரத்தி என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, சிறையில் சசிகலாவை சந்திக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, தினகரன், புகழேந்தி உள்பட 6 பேர் வந்து சென்றதாக அறிக்கை வழங்கப்பட்டது. ஆனால் இதில் விதிமீறல் இருப்பதாக சந்தேகப்பட்ட நரசிம்மமுர்த்தி,  அதே கேள்வியை மீண்டும் கேட்டுள்ளார். அப்போது, சிறை வருகை பதிவேட்டில், சந்திரலேகா மற்றும் அவரின் உதவியாளர் மதன்ராஜ் ஆகிய இருவர் மட்டுமே சசிகலாவை சந்தித்ததாக தகவல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் விவரம் குறித்து இருவேறு தகவல் அளிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்