சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்புகிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.;
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர்இருப்பு ஆயிரத்து 648 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. ஆயிரத்து 81 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர்மட்டம் 159 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 50 மில்லியன் கனஅடியாகவும் உயர்ந்துள்ளது.