தீபாவளி - சிறப்பு பேருந்துகள் இயக்கம் : 2,531 பேருந்துகளில் 1,16,364 பேர் பயணம்
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் , சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.;
தீபாவளியை முன்னிட்டு பத்தாயிரத்து 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்திருந்தது, இந்நிலையில் வழக்கத்தை விட கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பயணிகள் வசதிக்காக சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் தகவல் கேட்டறிய விசாரணை மையம் அமைக்கப்பட்டிருந்தன, நேற்றிரவு இயக்கப்பட்ட இரண்டாயிரத்து 531 பேருந்துகளில் மட்டும் ,ஒரு லட்சத்து 16 ஆயிரத்தி 364 பயணிகள் பயணித்துள்ளதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சிறப்பு ஏற்பாடுகளால், பேருந்துகளில் கூட்ட நெரிசல் இன்றி ஊருக்கு எளிதாக செல்ல முடிவதாக பயணிகள் கூறினர்..