ஜெயகோபால் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இளம்பெண் சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி ஜெயகோபாலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-10-24 11:17 GMT
சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயகோபாலுக்கு ஜாமீன் வழங்க அரசுத்தரப்பு மற்றும் சுபஸ்ரீ தந்தை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இல்ல விழாவிற்கு வைக்கப்பட்ட பேனர் விழுந்து பெண் பலியானதை தொடர்ந்து, மனுதாரர் தாமாக காவல் நிலையம் சென்று விசாரணைக்கு ஒத்துழைத்திருக்க வேண்டும் என நீதிபதி கார்த்திகேயன் கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஜெயகோபால் தரப்பு வழக்கறிஞர், தலைமறைவாக வில்லை எனவும், யாரையும் கொல்ல வேண்டும் என்ற உள்நோக்கமும் தங்களுக்கு இல்லை எனவும் கூறி, மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்