குற்ற எண்ணிக்கை தகவலில் முரண்பாடு : "முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" - ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெற்ற கொலைகள் குறித்து, சட்டமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-23 07:59 GMT
தமிழகத்தில் நடைபெற்ற கொலைகள் குறித்து, சட்டமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆயிரத்து 466 கொலைகள் மட்டுமே நடைபெற்றதாக முதலமைச்சர் பதிவு செய்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், ஆதே ஆண்டு, தமிழகத்தில், ஆயிரத்து  613 கொலைகள் நடைபெற்றுள்ளதாக, அதிமுக அரசு, குற்ற ஆவண காப்பகத்தில் தெரிவித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். சட்டமன்றத்தில் தவறான தகவல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்ததாகவும் அதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தாழ்த்தப்பட்டோர் மற்றும்  பழங்குடியினர் கொலையில்,  தமிழகம், இந்தியாவிலேயே 4-வது இடமாக இருப்பதாக கூறிய ஸ்டாலின் கொலை குற்றங்களின் அச்சத்தில் இருந்து, மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்