முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.;
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்வேறு துறையினருக்கு பல்கலைக்கழகங்கள் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அரசியல் தலைவர்களுக்கும் அவ்வப்போது வழங்கப்படுவது உண்டு. அந்த வரிசையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வரும் 20ஆம் தேதி நடைபெறும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.