"பெண் கிடைக்காத விரக்தியில் காவலர் தற்கொலை" - விஷம் அருந்தி தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்
சிதம்பரம் அருகே வில்லயநல்லூரை சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற காவலர், பெண் கிடைக்காத விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.;
சிதம்பரம் அருகே வில்லயநல்லூரை சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற காவலர், பெண் கிடைக்காத விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஷ்குமார், உளுந்தூர்பேட்டை பட்டாலியன் கம்பெனி 2ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2 மாதங்களாக பெண் பார்த்தும் கிடைக்காத விரக்தியில், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.