சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நள்ளிரவில் ஆய்வு : ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் பரபரப்பு

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.

Update: 2019-09-26 03:28 GMT
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார். டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ள நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையில் குறைபாடு உள்ளதா என அமைச்சர் ஆய்வு செய்தார். மருத்துவர்களின் அணுகுமுறை குறித்து அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டு தெரிந்து கொண்டார். ஊழியர்களின் வருகை பதிவேடு, நோயாளிகளின் விபரம் உள்ளிட்டவற்றையும் அமைச்சர் ஆய்வு செய்தார். நள்ளிரவில் அமைச்சர் மேற்கொண்ட ஆய்வால் மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது .
Tags:    

மேலும் செய்திகள்