பாலம் அமைப்பதற்காக வெட்டப்படும் அரியவகை மரங்கள் வேரோடு பெயர்த்து வேறு இடத்தில் நட முடியுமா? - நீதிமன்றம் கேள்வி

மதுரையில் பாலம் அமைப்பதற்காக காளவாசல் முதல் குரு தியேட்டர் வரையிலான சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

Update: 2019-09-18 02:11 GMT
மதுரையில் பாலம் அமைப்பதற்காக காளவாசல் முதல் குரு தியேட்டர் வரையிலான சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு,  நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பாக  விசாரணைக்கு வந்தது.  அப்போது, மரங்களை பாதுகாக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில் தமிழக அரசு ஏன் தீவிரம் காட்டுவதில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து மரங்களை வேரோடு பெயர்த்து வேறு இடத்தில் நட முடியுமா என்பது  குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  உத்தரவிட்டு வழக்கை வரும்  30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்