அரசு பள்ளிகளுக்கு 18 கோடி ரூபாய் சிறப்பு நிதி - தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு சிறப்பு நிதியாக 18 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-09-14 11:28 GMT
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு சிறப்பு நிதியாக 18 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் சிறப்பு கட்டணம் ஆண்டு தோறும் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 2008 - 09 ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏற்படும் நிதி இழப்பை சரி செய்யும் வகையில் தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் நிதி உதவி அளித்து  வருகிறது . அதன்படி, 2018 - 19 ஆம் ஆண்டுக்காக 18 கோடி ரூபாயை  அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுவித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்