பந்தம் போற்றும் சடங்கு, சம்பிரதாயங்கள் : வியக்க வைக்கும் விநோத திருமணம்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆடம்பரமின்றி பாரம்பரிய முறைப்படி பச்சை குடிலில் நடந்த திருமணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-09-12 05:38 GMT
தொப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த கதிரேசனுக்கும், உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த கவுசல்யாவுக்கும் பண்பாட்டு சடங்குகளுடன் திருமணம் கோலாகலமாக நடந்தது. உறவினர் புடை சூழ புதுப்பெண் மாப்பிள்ளை ஊருக்கு அழைத்து வரப்படுகிறார். அப்போது, இரு வீட்டாரும் இணைந்து குடும்ப பாரம்பரியத்தை சொல்லி, தெலுங்கில் மங்கள வாழ்த்து பாடுகிறார்கள். அதைதொடர்ந்து, மாப்பிள்ளை, புதுப்பெண்ணுக்கு சில சடங்குகள் சம்பிரதாயங்கங்கள் செய்யப்படுகிறது. பின்னர் ஊர் மந்தையில் உள்ள பச்சை குடிலுக்கு மணமக்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அங்கு குல குரு முன்னிலையில், இருவருக்கும் திருமணம் நடக்கிறது. மணமகனுக்கு வழங்கப்படும் அதே மரியாதை, முக்கியத்துவம் துணை மாப்பிள்ளைக்கும் வழங்கப்படுகிறது. இதையடுத்து, சமுதாய இளைஞர்கள் ஒன்றிணைந்து பாரம்பரியமான தேவராட்டம் ஆடிய மணமக்களை மகிழ்விக்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்