திருவொற்றியூர் : தீ விபத்தில் பள்ளி ஆசிரியை மரணம் - கணவரிடம் போலீஸ் விசாரணை

திருவொற்றியூர் அருகே எதிர்பாராதவிதமாக மெழுகுவர்த்தி சாய்ந்து ஏற்பட்ட தீ விபத்தில், ஆசிரியை உயிரிழந்தார்.;

Update: 2019-09-05 08:18 GMT
எர்ணாவூரில் வசித்து வந்த தனியார் பள்ளி ஆசிரியை ஜெபா, தனது மகன் ப்ராஜெக்ட் (project) செய்ய உதவியுள்ளார். திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துள்ளார். எதிர்பாராதவிதமாக அந்த மெழுகுவர்த்தி தெர்மகோலில் சாய்ந்து தீப்பிடித்தது. வேகமாக பரவிய தீ ஆசிரியை புடவையில் பற்றிக் கொண்டது. சப்தம் கேட்டு ஓடி வந்த கணவர் யபேஷ், குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வருவதற்குள் தீ அறை முழுவதும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் ஆசிரியை ஜெபா, உடல் கருகி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், விபத்து குறித்து ஜெபாவின் கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
Tags:    

மேலும் செய்திகள்