"முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றி தான்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் செய்யும் விமர்சனத்திற்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.;
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் செய்யும் விமர்சனத்திற்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சோ- ஜயர் இல்லத் திருமண விழாவில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எதிர்க்கட்சிகள் என்னதான் விமர்சனம் செய்தாலும், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.