விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி

சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் நடைபெற்று வரும் கண்காட்சி பொதுமக்களை ஈர்த்து வருகிறது.

Update: 2019-09-01 23:25 GMT
சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த கட்டிட கலை நிபுணரான சீனிவாசன், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை கண்காட்சியை நடத்தி வருகிறார்.  13 வது ஆண்டாக தற்போது தொடங்கியுள்ள கண்காட்சியில், 12 ஆயிரம்  விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. சிட்லபாக்கத்தில் தனியார் திருமண  மண்டபத்தில் நடைபெற்று வரும் கண்காட்சியில், ஏழு அடி உயரத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்திவரத விநாயகர், ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 200க்கு மேற்பட்ட  சிலைகள் இடம் பெற்றுள்ளன. வெளிநாடுகளில் உள்ள விநாயகர் கோவில்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ள இந்த கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்