பழந்தமிழர்களின் கடல் கடந்த வாணிப தொடர்புகள் : ஆழமாக ஆய்வு செய்ய தமிழக அரசு திட்டம்

தமிழக அரசு தொல்லியல்துறை இதுவரை 40 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த் இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது.

Update: 2019-08-30 05:53 GMT
தமிழக அரசு தொல்லியல்துறை இதுவரை 40 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த் இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. கொற்கை, அழகன்குளம்,  கொடுமணல், பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தமிழர்களின் தொன்மை குறித்த பல்வேறு ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. இதனை தொடர்ந்து 2019-20 ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோடு மாவட்டம் கொடுமணல் ஆகிய இடங்களில் தீவிர ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதேபோல தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகத்தை வெளிக்கொணறும் வகையில் ஆற்றின் இருபுறங்களிலும் தொன்மை வாய்ந்த இடங்களை கண்டறிய விரிவான கள ஆய்வுகளை துவங்கியிருக்கிறது. 

இந்நிலையில் வரலாற்று ஆய்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடல் அகழாய்வு நடத்தப்படும் எனவும், இதற்காக ஆண்டு தோறும் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஆழ்கடலில் அகழாய்வு பணிகளை துவங்கும் வகையில் தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து முதற்கட்ட ஆலோசனை கூட்டத்தை தமிழக தொல்லியல் ஆய்வுத்துறை நடத்தியுள்ளது. இது தமிழர்களின் தொன்மை குறித்த ஆய்வுகளுக்கு மிகப்பெரிய முன்னெடுப்பாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்