"திமுக - தி.க. இரட்டைக்குழல் துப்பாக்கி" - கி.வீரமணி உரை

சேலத்தில் திராவிடர் கழக 75 வது ஆண்டு பவள விழா மாநாட்டின் தொடக்க விழா சேலம் அம்மாபேட்டையில் நடைபெற்றது.

Update: 2019-08-28 02:07 GMT
சேலத்தில் திராவிடர் கழக 75 வது  ஆண்டு பவள விழா மாநாட்டின் தொடக்க விழா சேலம் அம்மாபேட்டையில் நடைபெற்றது. இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் மொழியால் வேறுபட்டு இருந்தாலும் திராவிடர் என்ற இனத்தால் ஒன்று பட்டுள்ளோம் என்றார்.  தமிழகத்தில் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்று  திராவிட கழகமும், திமுகவும் உள்ளதாக கி.வீரமணி குறிப்பிட்டார். திமுக அரசியலை பார்த்துக் கொள்ளும் என்றும், திராவிட கழகம் அதற்கு அணியை உருவாக்கி பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்