ஆசிய அளவிலான நடன போட்டியில் தங்கம் - சென்னையை சேர்ந்த 7 வயது சிறுமி சாதனை
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ரக்ஷனா என்ற 7 வயது சிறுமி ஆசிய அளவில் நடைபெற்ற மேற்கத்திய நடன போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.;
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ரக்ஷனா என்ற 7 வயது சிறுமி, ஆசிய அளவில் நடைபெற்ற மேற்கத்திய நடன போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தென்கொரியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் சீனா, தைவான், கொரியா, கிரிச் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட சிறுமிகள் பங்கேற்றனர். இதில் ரக்ஷனா 1 நிமிடம் 40 வினாடிகளில் அனைத்து விதமான நடன அசைவுகளையும் ஆடி, தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக நாடுகள் பங்கேற்கும் போட்டியில் வெற்றி பெறுவதே லட்சியம் என சிறுமி ரக்ஷனா தெரிவித்துள்ளார்.