நன்கொடை தர மறுத்த கடை உரிமையாளருக்கு "பளார்"... சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் தர மறுத்த கடை வியாபாரி தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-08-19 14:05 GMT
திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ண‌ர் சிலை வைப்பதற்காக அப்பகுதியில் உள்ள கடைகளில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் பணம் வசூல் செய்யப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிவா என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடையில் நன்கொடை கேட்டபோது, அவர் 300 ரூபாய் கொடுத்த‌தாகவும், ஆனால், அவர்கள் ஆயிரம் ரூபாய் கேட்டு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், கடை உரிமையாளர் சிவாவை தாக்கியுள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகளை ஊத்துக்குளி காவல்நிலையத்தில் கொடுத்து, சிவா புகார் அளித்துள்ளார். இதையடுத்து, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த வசந்த், விக்னேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்