காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26.12.2025)

Update: 2025-12-26 00:56 GMT
  • நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது...2ம் வகுப்பு பெட்டிகளில் 216 முதல் 750 கிலோ மீட்டர் வரையிலான பயணத்திற்கு 5 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது...
  • புத்தாண்டு முதல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் நெல்லை, பொதிகை மற்றும் முத்துநகர் ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட உள்ளது...நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்கும், பொதிகை மாலை 6.50 மணிக்கும், முத்துநகர் இரவு 9.05 மணிக்கும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின்னர், ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பம் அளித்துள்ளனர்...ஆயிரத்து 211 பேரை நீக்கவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
  • புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்...மது போதையில் வாகனம் ஓட்டினால், பைக் ரேசில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது...
  • கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, டெல்லியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பிரதமர் மோடி பங்கேற்றார்...
  • மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் விழாக்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்...சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில் தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்
  • அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க பத்து பேர் கொண்ட குழுவை அமைத்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்...நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் அறிக்கையை தாயாரிக்கும் என்றும் ஈ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
  • 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த தவெகவில் ஆள் இல்லை என பாஜக மாநில நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்...பொங்கல் பண்டிகைக்குப் பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்...
  • சென்னை அடையாறு - கிண்டியை இணைக்கும் சர்தார் படேல் சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது...
  • 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டரை கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... 
  • தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி...
  • தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
  • சைக்கிள்-பைக்கில் இடியாப்பம் விற்பனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை லைசன்ஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வரும் நிலையில் பேருந்தின் பிரேக்கை பரிசோதித்த பிறகே மக்கள் பயன்பாட்டிற்கு எடுக்க வேண்டும்...பேருந்து சக்கரங்களில் நட்டுகள் இறுக்கமாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்யவும் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது...
Tags:    

மேலும் செய்திகள்