அத்திவரதர் உற்சவத்தின் 46வது நாள் - மஞ்சள், ரோஸ் நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தின் 46வது நாளான இன்று கடைசி தரிசன நாள் என்பதால் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

Update: 2019-08-16 12:04 GMT
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்களுக்கு நடைபெறும் அத்திவரதர் உற்சவம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உற்சவத்தின் 46வது நாளான இன்று, அத்திவரதர் மஞ்சள், ரோஸ் நிற பட்டாடையில், மலர் மாலைகள் அணிந்து காட்சி தந்து வருகிறார்.இன்றுடன் பக்தர்களுக்கான தரிசனம் நிறைவடைந்து, நாளைய தினம் அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுகிறார். இந்நிலையில் கடைசி தரிசன நாள் என்பதால், மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நள்ளிரவு முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வரை, ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்