மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரால் பயிர்கள் சேதமடைய வாய்ப்பில்லை - ராமன்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்கவுள்ள நிலையில் அணையை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார்.;
டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்கவுள்ள நிலையில், அணையை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், திறக்கப்படும் தண்ணீரால் பயிர்கள் சேதமடைய வாய்ப்பில்லை என்று உறுதியளித்தார்.