"கூடங்குளம் அணு உலையை அகற்றுக" - மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்

கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும் என்று மாநிலங்களவையில், ம.தி.மு.க. எம்.பி. வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-08-06 09:29 GMT
கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும் என்று மாநிலங்களவையில், ம.தி.மு.க. எம்.பி. வைகோ வலியுறுத்தியுள்ளார். நேரமில்லா நேரத்தின் போது பேசிய வைகோ, சூரிய ஒளி, காற்று, கடல் அலை ஆகியவற்றில் இருந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்தியாவில் உள்ள அணு உலைகளை மூட வேண்டும் என்றும், புதிய அணு உலைகள் அமைக்க கூடாது என்றும் வைகோ வலியுறுத்தினார். கூடங்குளத்தில்  அணு உலை பூங்கா அமைக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது, காயம்பட்ட புண்ணில் உப்பை தடவுவது போல இருப்பதாகவும் வைகோ சாடினார். மேலும் பண்டோரா என்ற கொரியப் படத்தில் அணு உலை விபத்தால் ஏற்படும் நிகழ்வை சுட்டிக்காட்டிய வைகோ, இதன் சி.டி. யை தாம் தருவதாகவும், அதனை மாநிலங்களவை தலைவர் காண வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்