சென்னையில் தண்ணீர் லாரி மோதியதில் ஒன்றரை வயது குழந்தை பலி

சென்னையில் தண்ணீர் லாரி மோதியதில் ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2019-08-02 10:47 GMT
சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்தவர் ராஜாராம். இவர் தன் மனைவி சிந்து மற்றும் ஒன்றரை வயது மகள் சர்வேஸ்ரீயுடன் பல்லாவரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். பம்மல் அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை ராஜா முந்த முயன்றுள்ளார். அப்போது லாரி இவர்களின் வாகனத்தின் மீது மோதியதில் பின் சக்கரத்தில் சிக்கி குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநர் கோவிந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... பரபரப்பான சாலையில் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்