ஆரம்ப பள்ளி மாணவருக்கு கதைகள் மூலம் பாடம் நடத்த ஏற்பாடு : ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியது

ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கதைகள் மூலம் பாடம் நடத்துவதற்கு தொடக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

Update: 2019-07-30 10:35 GMT
ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கதைகள் மூலம் பாடம் நடத்துவதற்கு தொடக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு வழக்கமான முறையில் இல்லாமல், கதைகள் மூலம் குழந்தைகளை கவரும் வகையில் பாடம் நடத்துவதற்கு தொடக்கக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக சோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 160 பள்ளிகளில் நடப்பாண்டில் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.இதற்காக, கதைகளை எப்படி சிறப்பாக குழந்தைகளுக்கு சொல்வது என்பது குறித்து, ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி  சென்னையில் இன்று தொடங்கி உள்ளது. கதைகளை சொல்வதில் அனுபவம் பெற்ற ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்