பொதுமக்கள் ஒன்று சேர்ந்து குளம் தூர்வாரும் பணிக்கு முட்டுக்கட்டை - மணல் திருடுவதற்காக நடக்கிறது என குற்றச்சாட்டு

திருச்சி அருகே பொதுமக்கள் ஒன்று சேர்ந்து குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நிலையில் அரசு உரிய ஒத்துழைப்பு வழங்காததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-07-30 09:28 GMT
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலைப்பட்டி பகுதியில், 143 ஏக்கர் பரப்பில் மாவடி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த நிலையில் பராமரிப்பின்றி கிடந்தது. இதுதொடர்பாக உரிய
நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அரசு தரப்பில் எந்தவித உதவிகளும் வழங்கப்படாததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாநகராட்சி தரப்பில் ஒரு கோடியே 94 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டும் அதை வழங்காததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். குளத்தில் மணல் திருடுவதற்காக தான் இந்த பணிகளை கிடப்பில் போட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்